×

தமிழ் நாகரிக வரலாறு பேசட்டும் அகழ்வாராய்ச்சிக்கு ஒப்புதல் வழங்குங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: கீழடி பேசட்டும், வரலாறு மேலெழட்டும், கீழடி, ஆதிச்சனூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள ஒன்றிய பாஜ அரசிடம் உடனடி ஒப்புதல் வேண்டித் தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பி 8 மாதங்கள் ஆகியும் ஒப்புதல் கிடைக்கவில்லை. மீண்டும் மீண்டும் நாங்கள் கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறது. தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சியை மேற்கொள்வதற்கு உகந்த காலம் என்பது ஜனவரி முதல் ஜூலை வரைதான் இதை தவறவிட்டால், பருவமழையினால் களப்பணிகள் தடைபடும், முக்கிய ஆராய்ச்சிகள் தாமதமாகும், 2025-26ம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியும் வீணாகும். நான் கேட்க விரும்புவது ஏன் இந்த தயக்கம்? தமிழ் நாகரிகத்தின் தொன்மை என்பது இந்தியாவுக்கு ஊறு விளைவிப்பதல்ல, இந்தியாவின் நாகரிகப் பண்பாட்டுக்கு பெருமை சேர்ப்பது. எதைக் கண்டு பாஜ அரசு அஞ்சுகிறது? அகழ்வாராய்ச்சிக்கு ஒப்புதல் வழங்குங்கள், வரலாறு பேசட்டும். இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Tamil Nadu ,Keezhadi ,Tamil Nadu government ,BJP government ,Adichanur ,Nagapattinam ,
× RELATED நடிகை ஸ்ரீதேவியின் சொத்து தொடர்பான...