×

பிளஸ் 2 தேர்வெழுத சென்ற மாணவி பஸ் மோதி பலி

மதுரை: மதுரையில் பிளஸ் 2 தேர்வு எழுத தந்தையுடன் டூவீலரில் சென்ற மாணவி அரசு பஸ் மோதி பலியானார். விருதுநகர் மாவட்டம் ஆவியூர் பகுதியை சேர்ந்தவர் துர்காதேவி(19). மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இன்று காலை பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், மாணவி துர்காதேவி தேர்வு எழுதுவதற்காக ஆவியூரில் இருந்து தனது தந்தையுடன் டூவீலரில் வந்துகொண்டிருந்தார். மதுரை மாவட்டம் வலையன்குளம் அருகே வந்தபோது, மாணவி திடீரென பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

அப்போது பின்னால் வந்த அரசு பஸ் மாணவி மீது மோதியதில் படுகாயமடைந்தார். இதையடுத்து மாணவியை ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே மாணவி உயிரிழந்தார். அதைப் பார்த்து தந்தை கதறி அழுதார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். பிளஸ்2 தேர்வு எழுதச் சென்ற மாணவி பஸ் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Madurai ,Durgadevi ,Aviyur ,Virudhunagar district ,Kamaraj Salai ,Madurai.… ,
× RELATED திராவிட மாடல் ஆட்சியில் 5 ஆண்டுகள்...