சென்னை: இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக சென்னையில் 3வது நாளாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நேற்று திடீரென தாக்குதல்களை நடத்த தொடங்கியதை அடுத்து, ஈரான் பதிலுக்கு அமெரிக்காவின் ஏவுதளங்கள் இருக்கும் பகுதிகளில் தாக்குதலை நடத்த தொடங்கியது. இதையடுத்து மத்திய கிழக்கு நாடுகள் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஈரான் உள்ளிட்ட சில நாடுகள் தங்களுடைய வான்வழிப் பகுதிகளை மூடிவிட்டது. இதனால் மத்திய கிழக்கு பகுதிகளில் விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக சென்னையில் 3வது நாளாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 18 விமானங்கள் வரும் 18 விமானங்கள் என மொத்தம் 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து வளைகுடா நாடுகள், ஐக்கிய அரபு நாடுகள், துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், மஸ்கட் செல்லும் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. துபாய், அபுதாபி உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சனிக்கிழமை 28 விமானங்கள், நேற்று 33 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
