×

பாஜக-அதிமுக தொகுதி பங்கீட்டில் குழப்பம்: டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டார். பாஜக, அமமுக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுக்கு 70 தொகுதிகளை பாஜக ஒதுக்கக் கோருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள பல முக்கிய தொகுதிகளையும் குறிவைத்து பாஜக பேச்சு நடத்துகிறது. அதிமுக செல்வாக்கு உள்ள தொகுதிகளை பாஜக கேட்டு அடம்பிடிப்பதால் தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடித்து வருகிறது. மதுரையில் நேற்று பியூஷ் கோயலுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக எடப்பாடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

பாஜக அதிக தொகுதிகளை கேட்பதால் தே.ஜ.கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நேற்று நடந்த கூட்டணி பேச்சு எடப்பாடி தலைமையில் நடக்காமல் பியூஷ் கோயல் தலைமையில் நடந்ததால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் பாஜக ஆதிக்கம் செலுத்தி வருவதால் அதிமுகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அதிமுக அலுவலகத்தில் நடக்காமல் பாஜக ஏற்பாடு செய்யும் இடங்களில் நடக்கிறது.

இதனிடையே பாஜகவுடன் நேற்று நடத்திய தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. பாஜக கேட்கும் தொகுதிகளை ஒதுக்க அதிமுக தயங்குவதால் நேற்றைய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தொகுதி பங்கீடு பேச்சில் உடன்பாடு எட்டப்படாததால் எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.

Tags : Bhajaga ,Adimuka ,Eadapadi Palanisami ,Delhi ,Chennai ,Secretary General ,Edappadi Palanisami ,BJP ,AMUKA ,IJK ,
× RELATED பாஜக-அதிமுக தொகுதி பங்கீட்டில்...