×

வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பாளை காதுகேளாதோர் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு

நெல்லை, மார்ச் 2: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 73வது பிறந்தநாளையொட்டி பாளையில் உள்ள காது கேளாதோர் பள்ளி குழந்தைகளுக்கு வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் வேலன்குளம் கண்ணன் காலை உணவு வழங்கியதோடு அவர்களுடன் உணவருந்தினார். நிகழ்ச்சிக்கு நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் மனோஜ்குமார் முன்னிலை வகித்தார்.

இதில் கட்சி நிர்வாகிகள் அழகுமுத்து, இபி நடராஜன், ஆறுமுகம், சம்பத்ராஜா, திருப்பதி ஜெபசீலன், முத்துசாமி, உச்சிமாகாளி, சுப்பிரமணியன், மகாராஜன், சுரேஷ், மாரிச்சாமி, பாலசுப்பிரமணியன், லெனின், பாஸ்கர், சங்கரசுப்பு, மணிகண்டன், பாஸ்கர், செல்லத்துரை, செந்தில்குமார், மாயாண்டி, பாரதிதாசன், ராமச்சந்திரன், முருகேசன், சிவா, முத்துசங்கர், மணிகண்டன், விக்னேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : North Union DMK ,Palai Deaf School ,Nellai ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Velankulam Kannan ,Nellai East District DMK… ,
× RELATED உரிய ஆவணம் இல்லாத ரூ.4.92 லட்சம் பறிமுதல்