×

மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றித்திரிந்த பெண்ணை மீட்டு மகனுடன் அனுப்பி வைப்பு

பெரம்பலூர்,மார்ச் 2: பெரம்பலூரில் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றி திரிந்த பெண்ணை மீட்ட போலீசார், அவரது மகனுடன் அனுப்பி வைத்தனர். இதற்காக எஸ்பி அனிதா பாராட்டு தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த சாந்தம்மா என்ற நபரை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மருதமுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெரம்பலூர் வேலா கருணை இல்ல நிர்வாகி அனிதாவிடம் ஒப்படைத்தார்.

பின்னர் அந்த பெண் மனநல மருத்துவர் அசோக் வேலா கருணை இல்லத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் சாந்தம்மா (55) கணவர் பெயர் கிருஷ்ணமூர்த்தி என்பது தெரியவந்தது. மேலும், அவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.

அந்த பெண்ணின் மகன் பசவராஜ் என்பவரிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு எஸ்எஸ்ஐ மருதமுத்து, வேலா கருணை இல்ல நிர்வாகி அனிதா மற்றும் மனநல மருத்துவர் அசோக் ஆகியோர்களால் நல்லமுறையில் ஒப்படைக்கப்பட்டார். பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அனிதா, அந்த பெண்ணை நல்லமுறையில் உறவினரிடம் ஒப்படைக்க உதவிய அனைவரையும் வெகுவாக பாராட்டினார்.

 

Tags : Perambalur ,SP Anitha ,Perambalur district ,
× RELATED புதுக்குறிச்சியில் தனியார் தார் பிளாண்ட் கண்டித்து சாலை மறியல்