- பெரம்பலூர் மாவட்டம்
- பெரம்பலூர்
- மாவட்டம்
- கலெக்டர்
- மிருணாளினி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
பெரம்பலூர், பிப்.28: பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினி அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைப்படி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் 70 வயதிற்கு முதியவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களின் வீடுகளுக்கே சென்று குடிமைப் பொருட்களை வழங்கும் சிறப்புவாய்ந்தத் திட்டமாக ‘தாயுமானவர்‘ என்றத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் பெரம்பலூர் தாலுக்காவில் 5,015 நபர்களும், ஆலத்தூர் தாலுக்காவில் 4,092 நபர்களும், குன்னம் தாலுக்காவில் 5,136 நபர்களும், வேப்பந்தட்டை தாலுக்காவில் 4,916 நபர்களும் என மொத்தம் 19,159 நபர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இத்திட்டத்தின்கீழ் மார்ச் மாதத்திற்கு மாற்றுத் திறனாளிகள் மற்றும் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் வீடுகளுக்கே சென்று குடிமைப் பொருட்களை மார்ச் 2, 3 ஆகிய தேதிகளில் குடிமைப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. எனவே, முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்டக் கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
