×

பாடாலூர் அருகே பள்ளத்தில் வேன் சாய்ந்து 7 பயணிகள் காயம்

பாடாலூர், பிப்.28: பாடாலூர் அருகே பள்ளத்தில் வேன் சாய்ந்த விபத்தில் 7 பயணிகள் காயமடைந்தனர்.
சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் வேனில் குற்றாலத்துக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் சுற்றுலா சென்றனர். நேற்றுமுன்தினம் இரவு அவர்கள் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். வேனை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள புங்கனூரை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் விக்னேஷ் (40) ஓட்டினார்.

நேற்று அதிகாலை பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூரில் மேம்பாலம் பணிகள் நடைபெற்று வரும் சாலையில் வந்தபோது சாலை பணிக்காக பக்கவாட்டில் தோண்டப்பட்டிருந்த 5 அடி பள்ளத்தில் வேனின் ஒரு பகுதி இறங்கியது. இதில் வேனிலிருந்த சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த கலா(53), இளவரசி(55), சரளா(45) உள்பட 7 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த பாடாலூர் போலீசார் காயமடைந்தவர்களை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

Tags : Patalur ,Medavakkam, Chennai ,Courtallam ,
× RELATED புதுக்குறிச்சியில் தனியார் தார் பிளாண்ட் கண்டித்து சாலை மறியல்