×

நத்தம் செந்துறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

நத்தம், பிப். 28: நத்தம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் செந்துறையில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் மற்றும் வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட பொருளாளர் விஜயன் முன்னிலை வகித்தார். நத்தம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கே.பி.சாமி கலந்து கொண்டு முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

இதில் மாவட்ட பிரதிநிதி அழகர்சாமி, பொன்மணி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் குமரன், துணை அமைப்பாளர் யாசின், தொழில்நுட்ப அணி ரீகன் பிரபு, மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் சுமதி, நிர்வாகிகள் அயூப், துரைராஜ், சேகர், பாலு, பிரபாகர், கணேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள், வாக்குச்சாவடி நிலை- டிஜிட்டல் முகவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் நத்தம் அருகே வத்திபட்டியில் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார் தலைமையில் வாக்குச்சாவடி நிலை- டிஜிட்டல் முகவர்கள் கூட்டம் நடந்தது. நத்தம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கே.பி.சாமி கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பூசாரி, நிர்வாகிகள் முத்துராமலிங்கம், கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Tags : Demuka ,Natham Sendura ,Natham ,Sendura ,Nath North Union ,Union ,Palanichami ,West District Treasurer ,Vijayan ,
× RELATED சர்வதேச மகளிர் தின விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்