×

மாதம் ரூ.5 ஆயிரம் மளிகை பொருட்கள்; வேலுமணிக்கு டஃப் கொடுக்கும் சுயேச்சை

சட்டமன்ற தேர்தலின் போது ஒவ்வொரு தொகுதிகளிலும் புதிது புதிதாக சுயேச்சை வேட்பாளர்கள் களமிறங்குவார்கள். அவர்களும் பல்வேறு வாக்குறுதிகளை பொதுமக்களிடம் தெரிவிப்பார்கள். தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் தான் சுயேச்சை வேட்பாளராக களமிறங்க இருப்பதாக ஷாஜகான் என்பவர் அறிவித்து இருக்கிறார். அவர் தொண்டாமுத்தூர் தொகுதியை சேர்ந்த மக்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்களை வழங்குவேன் என வாக்குறுதியும் அளித்து இருக்கிறார்.

இவரது அறிவிப்பு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசு பொருளாகி இருக்கிறது. குறிப்பாக, தொண்டாமுத்தூர் தொகுதி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு வீடாக குடிநீர் தொட்டி முதல் எவர்சில்வர் தட்டு வரை விநியோகித்து வரும் நிலையில் சுயேச்சையாக களமிறங்க உள்ள நபர், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்களை வழங்குவேன் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருப்பதால் யாரு சாமி நீ என பலரும் அவரை வியந்து பார்த்து தேடி வருகின்றனர்.

Tags : Shah Jahan ,Goa Thondamuthur ,
× RELATED சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஏப்.6ம்...