- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- சட்டசபை
- கே. ஸ்டாலின்
- சென்னை
- முதல்வர் எம்.எல்.ஏ.
- திருவரூர்
- கொளத்தூர்
சென்னை: சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஏப்.6ம் தேதி வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சர் ஏப்ரல் 2ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை திருவாரூரில் தொடங்குகிறார். ஏப்.21ம் தேதி கொளத்தூர் தொகுதியில் தனது பிரச்சாரத்தை முடிக்கிறார்.
ஏப்ரல் 3ம் தேதி காலை ஜெயங்கொண்டம் பொதுக்கூட்டம் நடத்துகிறார். திருவெறும்பூரில் மாலை பொதுக்கூட்டம் மற்றும் திருச்சி மாநகராட்சியில் ரோடு ஷோ நடத்துகிறார். ஏப்ரல் 4ம் தேதி காலை கரூரில் பொதுக்கூட்டம், மாலை திருப்பூரில் பொதுக்கூட்டம் நடத்துகிறார். ஏப்ரல் 5ம் தேதி காலை நாகர்கோவில் மாலை திருநெல்வேலியில்பொதுக்கூட்டம் நடத்துகிறார்.
ஏப்ரல் 6ம் தேதி காலை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். மாலை திருவள்ளூரில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். ஏப்ரல் 7ம் தேதி காலை மேட்டுப்பாளையத்தில் பொதுக்கூட்டமும் மாலை சூலூரில் பொதுக்கூட்டம் மற்றும் ரோடு ஷோ நடத்துகிறார்.
ஏப்ரல் 8ம் தேதி பரமத்தி வேலூர், ஈரோடு மாவட்டங்களில் பொதுக்கூட்டம் நடத்துகிறார். 9ம் தேதி தருமபுரி, கிருஷ்ணகிரியில் பொதுக்கூட்டம், 10ம் தேதி வேலூர் மற்றும் ஆரணி மாவட்டங்களில் பொதுக்கூட்டம் நடத்துகிறார். 11ம் தேதி சிவகங்கையில் பொதுக்கூட்டம் நடைபெறும். 21ம் தேதி ஸ்ரீ பெரும்புத்தூர் தொகுதியில் பொதுக்கூட்டம் மாலை கொளத்தூரில் பிரசாத்தை நிறைவு செய்கிறார்.
