புளியங்குடி, பிப்.28: புளியங்குடியில் வெல்லும் தமிழ் பெண்கள் பரப்புரையை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார். புளியங்குடியில் திராவிட மாடல் அரசின் நிறைவேற்றிய பல நல்ல திட்டங்களை வீடுதோறும் மகளிர் அணியினர் எடுத்து செல்லும் வகையில் பரப்புரை தொடக்க விழா நடைபெற்றது. இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்தார். வாசுதேவநல்லூர் தொகுதி பொறுப்பாளர் தனுஷ்குமார் முன்னிலை வகித்தார். விழாவில் வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் தொகுதி மகளிர் அணி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி ராஜா எம்எல்ஏ பரப்புரையை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளர் செண்பக விநாயகம், புளியங்குடி நகர்மன்ற தலைவர் விஜயா சவுந்திர பாண்டியன், யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், மாவட்டத் துணைச் செயலாளர் மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் அன்பரசு, வெள்ளத்துரை, பேரூர் செயலாளர் ரூபி பாலசுப்பிரமணியன், மாவட்ட மகளிர் தொண்டரணி தலைவர் உமா மகேஷ்வரி, மகளிர் அணி துணை அமைப்பாளர் பொன்னு துரைச்சி, வெல்லும் தமிழ் பெண்கள் பொறுப்பாளர் அருணா தேவி, நகர அவைத்தலைவர் வேல்சாமி பாண்டியன், நகர மேற்கு பகுதி செயலாளர் நாகூர் ஹனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
