×

தாராபுரத்தை பொது தொகுதியாக அறிவிக்க வலியுறுத்தல்

தாராபுரம், பிப். 9:  தாராபுரம் சட்டமன்ற தொகுதியை தனித்தொகுதியிலிருந்து பொதுத் தொகுதியாக மாற்றம் செய்ய வேண்டும் என தேவேந்திர குல வேளாளர் இளைஞர் பேரவையினர் தீர்மானம் நிைறவேற்றி உள்ளனர். தாராபுரத்தில் தேவேந்திர குல வேளாளர் இளைஞர் பேரவையின் முப்பெரும் விழா பேரவையின் நிறுவனரும் பொதுச் செயலாளருமான கணபதி குடும்பனார் தலைமையில் நேற்று நடைபெற்றது. தேவேந்திர குல இளைஞர் பேரவையின் தலைமை அலுவலகத்தை தேவேந்திர மடாதிபதி ராஜ தேவேந்திர சுவாமிகள் திறந்து வைத்து பேசினார். தொடர்ந்து தாராபுரம் வட்டார தேவேந்திர குல வேளாளர்  திருமண மண்டபம் அமைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம், நிர்வாகிகள் தேர்வு மற்றும் கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

ரங்கநாத பாண்டியர் வரவேற்றார்.  தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:  தாராபுரத்தில் தேவேந்திர குல வேளாளர் திருமண மண்டபம் கட்டுவதற்காக தாராபுர வட்டார தேவேந்திர குல வேளாளர் அறக்கட்டளைக்கு நிர்வாகிகளை ஏகமனதாக தேர்வு செய்வது, அறக்கட்டளை தலைவராக ஆசிரியர் சுப்பிரமணியம், துணைத்தலைவர்களாக கருப்புச்சாமி, முருகேசன், செயலாளராக டாக்டர் கணபதி குடும்பனார், துணைச் செயலாளராக
ரங்கநாத பாண்டியர் மற்றும் இருளப்பன், பொருளாளராக சுப்பிரமணியம், பொதுக்குழு உறுப்பினர்களாக ஊரான் மாரிமுத்து, முருகேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேவேந்திர குல வேளாளர் திருமண மண்டப பணியை உடனடியாக பதிவு செய்து முன்னெடுப்பது என்றும், மத்திய மாநில அரசுகள் பட்டியல் வெளியேற்றத்துடன் கூடிய தேவேந்திர குல வேளாளர் அரசாணையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் தாராபுரம் சட்டமன்ற தொகுதியை தனித்தொகுதியிலிருந்து பொதுத் தொகுதியாக மாற்றம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஈரோடு மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், மொடக்குறிச்சி ஒன்றிய அமைப்பாளர் ஆறுமுகம், மூலனுார் ஒன்றிய தலைவர் ராசு, பள்ளபாளையம் பரமேஸ்வரன், தாராபுர ஒன்றிய துணை செயலாளர் வடிவேல், தாராபுர ஒன்றிய தலைவர் முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இறுதியில் மாவட்ட அமைப்பாளர் கருப்புச்சாமி நன்றி கூறினார்.

Tags : constituency ,Tarapur ,
× RELATED பா.ஜ போட்டியின்றி தேர்வு; சூரத் தொகுதி...