×

பெண்ணிடம் செல்போன் நம்பர் கேட்டதால் தகராறு: 3 பேர் காயம்

சிவகாசி, பிப்.27: இளம்பெண்ணிடம் நம்பர் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் 3 பேர் காயமடைந்தனர். சிவகாசி அருகே நாரணாபுரம்புதூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டிசெல்வம் மகன் வனப்பாண்டி (20). இவர் அதே பகுதியை சேர்ந்த திருமணமான 20 வயது பெண்ணிடம் செல்போன் நம்பர் கேட்டு தகராறு செய்துள்ளார். இது குறித்து அந்த பெண் தனது கணவரிடம் கூறி உள்ளார். அதனை தொடர்ந்து அவரது கணவர் நண்பர்கள் 2 பேருடன் வனப்பாண்டி வீட்டிற்கு சென்று கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த வனப்பாண்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கருப்பசாமி, ஜெயலட்சுமி ஆகியோர் பெண்ணின் கணவர் உள்ளிட்டோரை கட்டையால் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் பெண்ணின் கணவர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவத்தில் கருப்பசாமி அவரது உறவினர் பாண்டிசெல்வம் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து பெண் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Sivakasi ,Pandiselvam Makan Vanapandi ,Naranapurambudur ,
× RELATED ராஜபாளையம் தொகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய கட்டிட பணிகள்