×

கடமலை-மயிலை ஒன்றியத்தில் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி

வருசநாடு, பிப். 27: கண்டமனூர், ராமச்சந்திராபுரம், வருசநாடு, சிங்கராஜபுரம், பசுமலைத்தேரி, செங்குளம், தர்மராஜபுரம், வைகைநகர், குமணன்தொழு உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் சின்னவெங்காயத்தை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இதன் காரணமாக இப்பகுதியில் சின்ன வெங்காயம் சாகுபடி அதிகரித்துள்ளது. இதனால் அவற்றின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால் அவற்றை பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில், ‘‘இப்பகுதியில் சின்ன வெங்காயம் விளைச்சல் அதிகரித்துள்ளதால், மூன்று கிலோ சின்ன வெங்காயம் ரூ.100க்கு மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் அவற்றை பயிரிட்டுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றனர்.

 

Tags : Kadamalai-Mayilai ,Varusanadu ,Kandamanur ,Ramachandrapuram ,Sinharajapuram ,Pasumalaitheri ,Chengulam ,Dharmarajapuram ,Vaigainagar ,Kumananthozhu ,
× RELATED பெண்ணிடம் செல்போன் நம்பர் கேட்டதால் தகராறு: 3 பேர் காயம்