ராஜபாளையம், பிப். 27: ராஜபாளையம் தொகுதி சேத்தூர் பேரூராட்சி 12வது வார்டில் ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நிழற்குடை அமைக்க சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் அடிக்கல் நாட்டினார்.
அதனைத்தொடர்ந்து இளந்திரைகொண்டான் ஊராட்சியில் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியிலிருந்து ரூ.20 மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு அங்கன்வாடி குழந்தைகளுடன் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், சேத்தூர் பேரூராட்சி சேர்மன் பாலசுப்ரமணியன், பேரூர் கழக பொறுப்பாளர் சுந்தர், ஒன்றிய கழக நிர்வாகிகள் மலர்மன்னன், காந்தி, சேத்தூர் பேரூர் கழக நிர்வாகிகள் தவம், சீனிவாசன், கவுன்சிலர்கள் ராஜசோழன், உமையாள், பார்வதி, சமுத்திரம், பூஇசக்கி, திருமலைசெல்வி மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
