×

வேலாயுதம்பாளையம் அருகே போதையில் தகராறு செய்தவர் கைது

வேலாயுதம்பாளையம், பிப். 27: கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம்- நொய்யல் செல்லும் சாலையில் உள்ள நடையனூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலையில் ஒருவர் நடுவில் நின்று கொண்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்திக் கொண்டிஇருப்பதாக அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தெரிவித்தனர்.

சிறப்பு போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு ஒருவர் நடு ரோட்டில் நின்று கொண்டு மது அருந்திக்கொண்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையே ஏற்படுத்திக் கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்தார். விசாரணையில் நடையனூர் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் (32) .மெக்கானிக் என்பது தெரியவந்தது. போலீசார் லோகநாதனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

 

Tags : Velayudhampalayam ,Diyayanur ,Velayudhampalayam-Noyyal road ,Karur district ,
× RELATED கோரிக்கையை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டம்