×

நாளை நடக்கிறது விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கரூர், பிப். 26: விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் பிப்ரவரி 2026 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 27.2.2026 வெள்ளிக்கிழமை, காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறவுள்ளது. கரூர் மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் தவறாது விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Karur ,Grievance Redressal Day ,Karur district ,
× RELATED வேலாயுதம்பாளையம் அருகே போதையில் தகராறு செய்தவர் கைது