×

பென் காக் சிலாட் பீச் கேம்ஸ் போட்டி

கரூர், பிப். 27: தமிழ்நாடு பென் காக் சிலாட் அசோசியேஷன் சார்பில் 4வது மாநில அளவிலான பென் காக் சிலாட் பீச் கேம்ஸ் போட்டி, கடலூர் மாவட்டம் சில்வர் பீச் பகுதியில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் தமிழகத்தின் 28 மாவட்டங்களில் 750 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த பென் காக் சிலாட் வீரர், வீராங்கணைகள் பங்கேற்று 39 பதக்கங்களை பெற்றனர்.

பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். இந்த பென் காக் சிலாட் விளையாட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அங்கீகரித்த விளையாட்டு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வரும் 27 மற்றும் 28ம்தேதிகளில் கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடைபெறவுள்ள அஸ்மிதா கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் கரூர் மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

 

Tags : Ben Kag Silat Beach Games Competition ,Karur ,Tamil Nadu Ben Kag Silat Association ,Silver Beach ,Cuddalore district ,
× RELATED வேலாயுதம்பாளையம் அருகே போதையில் தகராறு செய்தவர் கைது