×

ஓம்காளியம்மன் திருக்கோயிலில் பூச்சாட்டு விழா

பள்ளிபாளையம், பிப். 27: பள்ளிபாளையம் ஓம்காளியம்மன் கோயில் திருவிழா பூச்சாட்டுதல் நடந்தது. இதையொட்டி, மேளதாளத்துடன் காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள், தீர்த்த குடமெடுத்து வந்தனர். அதிர்வேட்டு முழங்க கோயிலை வந்தடைந்த பக்தர்கள் கூட்டம், அம்மனுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்து நேர்த்திகடன் செலுத்தினர். அம்மனுக்கு பூச்சாட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்ற கோயில் நிர்வாகிகள், ஊர் பெரியவர்கள் மலர்களை போட்டு வணங்கி பூச்சாட்டினர். தொடர்ந்து காலை, மாலை வேளைகளில் அம்மனுக்கு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்று வருகிறது. வரும் 4ம் தேதி (புதன்கிழமை) சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும், பொங்கல் வைத்தலும் அன்று மாலை மாவிளக்கு ஊர்வலமும் நடக்கிறது.

Tags : Omkali Amman Temple ,Pallipalayam ,Cauvery river ,
× RELATED மல்லசமுத்திரத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பொது பார்வையாளர் ஆய்வு