×

குத்தாலம் வட்டாரத்தில் வாக்குச்சாவடி மையத்தை தேர்தல் பார்வையாளர் ஆய்வு

குத்தாலம், மார்ச்23: குத்தாலம் வட்டாரம் மாதிரிமங்கலம் ஊராட்சி பள்ளியின் வாக்குச்சாவடி மையத்தினை தேர்தல் பார்வையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டாரத்திற்குட்பட்ட, மாதிரிமங்கலம் ஊராட்சியில் உள்ள பள்ளியில் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி பகுதிகளில் நேற்று தேர்தல் பார்வையாளர் (பொது) சஞ்சய்குமார்யாதவ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது சட்டமன்ற தேர்தலில் எதிர்கொள்ளும் வகையில் கட்டிட அமைப்பு, வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கினார். அப்போது குத்தாலம் தாசில்தார் ரவிச்சந்திரன்,விஏஓ குமார் உள்ளிட்ட வாக்குச்சாவடி நிலையை அலுவலர்கள் பலர் உள்ளனர்.

 

Tags : Kutthalam block ,Kutthalam ,Madrimangalam Panchayat School ,2026 Assembly elections ,Madrimangalam Panchayat ,Mayiladuthurai ,
× RELATED உலக நன்மை, அமைதி வேண்டி சிறப்பு பூஜை