×

பொதுத்தேர்வு நிறைவு பிளஸ் 2 மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

நாமக்கல், மார்ச் 24: தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு, கடந்த 2ம் தேதி துவங்கியது. நாமக்கல் மாவட்டத்தில் இந்தாண்டு 18 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். நேற்று கணிதம், அறிவியல் பாடப் பிரிவு மாணவ, மாணவியருக்கு இறுதி தேர்வு நடைபெற்றது. நேற்று உயிரியல், தாவரவியல், வரலாறு போன்ற பாடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிந்த மகிழ்ச்சியில் மாணவ, மாணவிகள் தேர்வு மையத்தில் இருந்து மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு சென்றனர். பிளஸ் 2 மற்ற பாடப்பிரிவு மாணவ, மாணவியருக்கு வரும் 27ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைகிறது.

Tags : general election ,Namakkal ,Plus 2 Government General Election ,Tamil Nadu ,YESTERDAY ,
× RELATED மல்லசமுத்திரத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பொது பார்வையாளர் ஆய்வு