×

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

நாமக்கல், மார்ச் 23: நாமக்கல் மாவட்டத்தில், சட்டமன்ற பொது தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, குமாரபாளையம் மற்றும் பரமத்திவேலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதியிலும், மொத்தம் 1,780 வாக்குசாவடிகள் 6 சட்டம்ன்ற தொகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குசாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான கணினி மூலம் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில், இன்று (23ம் தேதி) காலை 11 மணிக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் ஒதுக்கிடு செய்யும் பணி கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமையில் நடை பெறுகிறது. கூட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாவட்ட எஸ்பி விமலா, காவல் துணை கண்காணிப்பாளர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.

நாளை (24ம் தேதி) காலை 7 மணிக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையத்தில் இருந்து, ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள், அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகிறது.

 

Tags : Namakkal ,Assembly ,Rasipuram ,Senthamangalam ,Thiruchengode ,Kumarapalayam ,Paramathivellur ,
× RELATED உலக நன்மை, அமைதி வேண்டி சிறப்பு பூஜை