×

கூட்டுறவு வங்கி ஊழியர் மாயம்

பண்ருட்டி, பிப். 27: பண்ருட்டியை அடுத்துள்ள சேமக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(40). இவர் மேல்அருங்குணம் கூட்டுறவு வங்கியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 11ம் தேதி மதியம் ஆபீசுக்கு சென்றவர் வெகு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடி எங்கும் கிடைக்காததால் இவரது மனைவி சிவகங்கை(37), புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Cooperative Bank ,Panrutty ,Manikandan ,Semakottai ,Melarungunam Cooperative Bank ,
× RELATED மாற்றுத்திறனாளி பெண் பாலியல் பலாத்காரம்