×

வெள்ளாங்குளி அரசு பள்ளியில் ரூ.2.36 கோடியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு

வீரவநல்லூர்,பிப்.27: வீரவநல்லூர் அருகே வெள்ளாங்குளி அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டம் மூலம் ரூ.2.36 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட 10 வகுப்பறை கட்டிடங்களின் திறப்பு விழா நடந்தது. இதனை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து வெள்ளாங்குளி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் தலைமை வகித்து புதிய வகுப்பறை கட்டிடத்தில் குத்து விளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் தளவாய், அம்பை யூனியன் சேர்மன் பரணிசேகர், வெள்ளாங்குளி ஊராட்சி தலைவர் முருகன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கண்ணன், மீரான் பண்ணையார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டாக்டர் பிரகாஷ், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி சூரியா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Vellanguli ,Government School ,Veeravanallur ,NABARD ,Vellanguli Government Higher Secondary School ,Chief Minister ,M.K. Stalin ,Chennai Secretariat… ,
× RELATED உரிய ஆவணம் இல்லாத ரூ.4.92 லட்சம் பறிமுதல்