×

ஒரு போட்டோகிராபர் குடும்பத்துக்கு இவ்வளவா? 10 தலைமுறை சம்பாதித்தால் கூட இப்படி சேர்க்க முடியாது: அம்மாவை ஏமாத்தி, ஏமாத்தி ஆயிரக்கணக்கான கோடி சொத்தை சம்பாதிச்சு வச்சிருக்கியே

* கட்சியின் ரத்தத்தை உறிஞ்சி அதிபதியாகி இருக்கியே: சசிகலாவை ஒருமையில் வெளுத்து வாங்கிய கே.பி.முனுசாமி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ பேசியதாவது: இந்த கட்சியினால் பலன் அடைஞ்சவங்க, பயன் அடைஞ்சவங்க, சமூகத்தில் அடையாளம் காணப்பட்டவங்க எல்லாம் எப்படியாவது அதிமுக தோற்க வேண்டும் என்று நினைக்கிறாங்க. அதிமுகவில் எடப்பாடி முதலமைச்சராக வரக்கூடாது என்ற சிந்தனையோடு ஒரு கூட்டம் அலையுது. நேற்று ஒரு அம்மையார், ஜெயலலிதாவிடம் வேலைக்கு போனவங்க, வேலைக்கு போய் பலன் அடைஞ்சவங்க பேசியிருக்காங்க.

ஜெயலலிதா ஒருவரை நம்பி விட்டால் அனைத்தையும் கொடுத்து விடுவார். ஒரு கட்டத்தில் தன்னுடைய பதவியை அவங்க எடுக்கிறாங்க என்று தெரிந்ததும் வீட்டை விட்டு வெளியேற்றினாங்க. அவரை மட்டுமல்ல. அவங்க குடும்பத்தையே வெளியேற்றினாங்க. அப்படி வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் வரவேண்டும் என்று ஆசைப்பட்டு ஒரு கடிதம் கொடுத்தாங்க. அப்படிப்பட்டவங்க பேசியிருக்காங்க. எங்களது பொதுச்செயலாளரை மிகவும் கடுமையாக விமர்சனம் செஞ்சிருக்காங்க. அதனால் இப்போது பேச வேண்டிய நிலைக்கு நான் வந்துள்ளேன்.

அம்மாவிடம் அவங்க ஒரு கடிதம் கொடுத்தாங்க. அந்த கடிதத்தில் உண்மையான தங்கையாக உங்களுக்கு நான் இருப்பேன். எந்த விதத்திலும் அரசியலில் நான் ஈடுபட மாட்டேன். அரசியலில் பங்கு பெற மாட்டேன். உங்களுக்கு தங்கையாக இருந்து பணிவிடை செய்வேன். என்னை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன். இப்படி நீங்க தானே வாக்குறுதி கொடுத்து கையெழுத்து போட்டு கொடுத்தீங்க. இதனால் அம்மா ஏத்துக்கிட்டாங்க. எழுதி ெகாடுத்தவங்க, அம்மா உயிரோடு இருந்தவரை அமைதியாக இருந்தீங்க.

அம்மா மறைந்த பின்னாடி உன் கடமை என்ன? ஒதுங்கிக்கொள்ள வேண்டியது தானே? நேத்து மேடையில் பேசுறாங்க. பன்னீர்செல்வம் நல்ல மனுஷன். எல்லா அமைச்சர்களும் வந்து அவர்மேல் கம்ப்ளைன்ட் பண்ணினாங்க. என்னடா கம்ப்ளைன்ட் என்றால் ஒரு போலீஸ்காரரை மாத்தணும்னு சொல்றாரு. நான் எப்படிம்மா மாத்துறதுன்னு கேட்டாங்க. அம்மா எப்போதும் தவறான அதிகாரிகளை ஏத்துக்க மாட்டாங்க. அதுபோலத்தான் பன்னீர்செல்வமும் பண்ணினாரு. இதை எப்போ சொல்றாங்க, நேத்து சொல்றாங்க.

இதே அம்மையார் தான், முதலமைச்சராக இருந்த பன்னீர்செல்வத்தை கையெழுத்து போட்டு விட்டு, பதவியை விட்டு வெளியே போகச்சொன்னவங்க. வெளியே போகச்சொல்லிவிட்டு அம்மாவுக்காக வாழ்கிறேன், அக்காவுக்காக வாழ்கிறேன் என்று சொன்னவருக்கு இரண்டே நாளில் பற்றெல்லாம் போய்விட்டது. அம்மா மாதிரி கொண்டையை போட்டுக்கிட்டாங்க. அம்மா பொறுப்பை எடுத்துக்கிட்டாங்க. முதலமைச்சர் வேட்பாளர் ஆகிட்டாங்க. முதல்வர் என்று அறிவிச்சிட்டாங்க. அடுத்த நாள் முதலமைச்சர் பதவியேற்பு விழா.

முடியாமல் நீ போயிட்டியே, அப்போ என்ன அர்த்தம்? இன்றைக்கு மேடையில் உட்கார்ந்து பேசுறியே? என்ன வேதனை? எப்படி இந்த கட்சியின் ரத்தத்தை உறிஞ்சி, சாதாரண போட்டோகிராபராக இருந்த ஒரு குடும்பம், பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு அதிபதியாக இருக்கியே? எத்தனை வருஷம் சம்பாதிக்கணும்? பத்து தலைமுறைகள் சம்பாதித்தால் கூட அவ்வளவு சம்பாதிக்க முடியாது. அம்மாவை ஏமாத்தி, ஏமாத்தி, ஏமாத்தி ஆயிரக்கணக்கான கோடி சொத்தை சம்பாதிச்சு வச்சிருக்கியே? நீ முதலமைச்சராக வேண்டும் என்று போனியே? இயற்கை விடுமா? தர்மம் விடுமா? தர்மம் விடாது. தர்மம் விடாது.

இந்த மாதிரி ஒரு தவறான சிந்தனையோட, நல்ல கட்சி ஆட்சி என்று இருக்கும் இயக்கத்தை தன் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்பதற்காக நீ, முதலமைச்சர் ஆகப்போனே. ஆனால் தர்மம் தனது வேலையை ெசய்து விட்டது. உனக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு 4 ஆண்டுகள் சிறை. நீ சிறைக்கு போன பிறகு உன்னை யார் பார்த்தாங்க? என்ன செய்ய முடியும்? கர்நாடகாவின் பெங்களூரில் நீ இருக்கே. அதுக்கும் இங்கிருக்கும் முதலமைச்சருக்கும் என்ன சம்பந்தம்? நேற்று பேசுற, மிகப்பெரிய பழியை எங்கள் பொதுச்செயலாளர் மீது சுமத்தியுள்ளார்.

இது மிகவும் கண்டனத்திற்குரியது. நாங்கள் யாரைப்பற்றியும் கவலைப்படவில்லை. பொதுச்செயலாளரை பற்றி கூட கவலை இல்லை. இன்று இந்த பொதுச்செயலாளர் இருப்பார். நாளை இன்னொரு பொதுச்செயலாளர் வரலாம். ஆனால் இயக்கம் தான் ரொம்ப முக்கியம். இந்த இயக்கத்தின் தலைமை பொறுப்பு ஏற்றுள்ள ஒரு தலைவரை கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பார் என்று ஒரு மிகப்பெரும் பொய்யை, குற்றச்சாட்டை அந்த பெண்மணி வைத்துள்ளார்.

இது கண்டனத்திற்குரியது. இவங்கெல்லாம் கட்சி ஆரம்பித்து இந்த கட்சியை அழிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அழியுமா? இந்த போட்டோகிராபரை போல், ஓ.பன்னீர்செல்வம் ஒரு டீ கடை வச்சிருந்தவரு. இவர்களால் அதிமுகவை ஒன்றும் செய்யமுடியாது. இவ்வாறு கே.பி.முனுசாமி பேசினார்.

Tags : K. ,Sasicala ,Deputy Secretary General ,Akkatsi K. B. Munusamy ,MLA ,
× RELATED பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் செல்வதை தவிர்க்க சொல்லும் மதுரை பாஜவினர்