×

தவறி விழுந்தவர் பலி

திண்டுக்கல், பிப். 26: திண்டுக்கல் அருகே மயிலாப்பூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சேவியர் (65). கூலித்தொழிலாளி. இவர் அனுப்பப்பட்டியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு நிலை தடுமாறி கீழே தவறி விழுந்தார்.

இதில் படுகாயமடைந்த சேவியரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சேவியர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா எஸ்ஐ கலையரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

Tags : Dindigul ,Xavier ,Mylapore North Street ,Anupapatti ,
× RELATED உரிய ஆவணம் இல்லாத ரூ.4.92 லட்சம் பறிமுதல்