×

மாநில குத்துச்சண்டையில் தங்கம் வென்ற மாணவிக்கு அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து

தூத்துக்குடி, பிப். 26: மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற மாணவி ரோஸ்னி, அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றார். தூத்துக்குடி அருகே அல்லிக்குளத்தை சேர்ந்த சண்முகசுந்தரம்- வேலம்மாள் ஆகியோரின் மகள் ரோஸ்னி, நெல்லையில் உள்ள இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் காந்திமதி அம்பாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், தேனி மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் 69-75 கிலோ எடைப்பிரிவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். இந்நிலையில் மாணவி ரோஸ்னி, தூத்துக்குடியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மாணவி ரோஸ்னி தனது விளையாட்டிற்கு அரசு சார்பில் உதவிகள் செய்தால் உலகளவில் சாதனை படைக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். மாணவி ரோஸ்னியின் முயற்சிக்கு அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து தெரிவித்தார்.

Tags : Minister ,Geethajeevan ,Thoothukudi ,Rosni ,Shanmugasundaram-Velammal ,Allikulam ,Hindu Religious Endowments Department ,Nellai ,
× RELATED உரிய ஆவணம் இல்லாத ரூ.4.92 லட்சம் பறிமுதல்