×

அரூரில் 10, 12ம் வகுப்பு பொது தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு ஆலோசனை கூட்டம்

அரூர், பிப். 26: தமிழகத்தில் வரும் மார்ச் 2ம் தேதி முதல் 26ம் தேதி வரை 12ம் வகுப்புக்கும், 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 11ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரையும் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது. அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் பகுதியில் அரூர் ஆண்கள் பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தீர்த்தமலை, நரிப்பள்ளி, மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் உள்பட 2 மையங்களில் தேர்வுகள் நடைபெறுகிறது. இங்கு அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்ற சுமார் 650 முதுகலை, சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்களுக்கான தேர்வு மைய ஒதுக்கீடு குலுக்கல் முறையில் நடந்தது. பின்னர் அரூர் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் தேர்வு மைய கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா கலந்து கொண்டு, தேர்வு அறையில் பின்பற்ற வேண்டியவை, தேர்வினை சிறப்பான முறையில் நடத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினர். இதில் மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார், பள்ளிகளின் ஆய்வாளர்கள் பொன்னுசாமி, தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Aroor ,Tamil Nadu ,Morappur ,
× RELATED விடுமுறை தினம் என்பதால்...