டெல்லி: நாளை மறுநாள் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தமிழகம் வருகிறார். சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கான தொகுதிகள் குறித்து ஆலோசனை; வரும் வெள்ளிக்கிழமை அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கான தொகுதிகள் இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக தரப்பில் 35 தொகுதிகளை கேட்டு பெற உள்ளதாக கூறப்படுகிறது. 72 தொகுதிகளுக்கான உத்தேச பட்டியலை அதிமுகவிடம் ஏற்கனவே பாஜக வழங்கியுள்ளது.
