×

அய்யம்பாளையம் பேரூராட்சி மன்ற கூட்டம்

பட்டிவீரன்பட்டி, பிப்.25: அய்யம்பாளையம் பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி கூட்டரங்கில் நடந்தது. இக்கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் ரேகா அய்யப்பன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ஈஸ்வரி வரவேற்றார். இக்கூட்டத்தில் 15வது வார்டு பட்டிவீரன்பட்டி செல்லும் பாதையில் 1 வது தெருவில் ரூ.16.25 லட்சம் மதிப்பிலும், 2வது தெருவில் ரூ.17.75 லட்சம் மதிப்பிலும்,

3வது தெருவில் ரூ.16.25 லட்சம் மதிப்பிலும், 6வது வார்டு ஆதிதிராவிடர் காலனி குறுக்கு தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பிலும் பேவர்பிளாக் சாலை அமைத்தல், தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவுத்திட்டத்தினை அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தல் உட்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் இளநிலை உதவியாளர் பாண்டி நன்றி கூறினார்.

 

Tags : Ayyampalayam Town Panchayat Council Meeting ,Pattiveeranpatti ,Ayyampalayam Town Panchayat ,Council ,Town Panchayat Council Hall ,Town Panchayat Council ,Chairperson ,Rekha Ayyappan ,Vice Chairperson ,Jeevanandam ,Executive Officer ,Easwari ,Ward 15 Pattiveeranpatti… ,
× RELATED பெண்ணிடம் செல்போன் நம்பர் கேட்டதால் தகராறு: 3 பேர் காயம்