×

கல்லூரி மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி

திருச்சி,பிப்.25: திருச்சி, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுகை, ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு இடையிலான மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி கரூர், அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாக்-அவுட் முறையில் நடைபெற்றது.

5 கல்லூரிகள் பங்கேற்ற கைப்பந்து போட்டியின் இறுதி போட்டியில் திருச்சி, செயின்ட் ஜோசப் கல்லூரி, திருப்பனந்தாள், எஸ்.கே.எஸ்.எஸ். அரசுக் கல்லூரியை 41-36 என்ற கோல்கள் கணக்கில் வென்று முதலிடம் பிடித்து திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக கைப்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

3வது இடத்திற்கு நடைபெற்ற போட்டியில் கரூர், அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக முதன்மை வளாகத்தை 20-13 என்ற கோல்கள் கணக்கில் வென்று மூன்றாவது இடம் பிடித்தது.

 

Tags : Trichy ,Thanjavur ,Ariyalur ,Perambalur ,Karur ,Thiruvarur ,Nagapattinam ,Puducherry ,Government Arts and Science College ,Aravakurichi ,
× RELATED மின்கம்பத்தில் டூவீலர் மோதி மாணவன் பலி