×

மின்கம்பத்தில் டூவீலர் மோதி மாணவன் பலி

திருச்சி, பிப்.25: திருச்சியில் மின்கம்பத்தில் டூவீலர் மோதி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி மலைக்கோட்டை நடுதையல்கார தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் (54). காண்ட்ராக்டர். இவரது மகன் அருண்(17). புத்தூர் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இவரது நண்பர் பீமநகர் பகுதியைச் சேர்ந்த முகமது யாசிம் (16), இருவரும் நேற்று காலை, கோர்ட் பின்புறம் அண்ணா நகரில் இருந்து எம்.ஜி.ஆர் சிலை சாலை நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருண் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Trichy ,Nagaraj ,Naduthayalkara Street, Malaikottai, Trichy ,Arun ,Puttur ,
× RELATED கல்லூரி மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி