×

நீடாமங்கலம் அரசு உதவி பெறும் பள்ளியில் கணினி வகுப்பு தொடக்கம்

நீடாமங்கலம்,பிப்.25: நீடாமங்கலம் அரசு உதவி பெறும் பள்ளியில் கணினி வகுப்பு தொடங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அரசு உதவி பெறும் இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கணினி வகுப்பு தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க பொருளாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

நீடாமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலர் இன்ப வேணி தொடங்கி வைத்து கணினியின் முக்கியத்துவத்தும் பற்றியும், தற்காலத்தில் கணினிவழி கல்வி அனைவருக்கும் தேவையென்றும், விவசாயம், பொருளாதாரம், வர்த்தகம், மருத்துவம், விளையாட்டு, வான்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கணினி பயன்பாடு அவசியமான ஒன்றாக உள்ளது. மாணவர்கள் தொடர்ச்சியாக கணினி பற்றிய தகவல்களை அறிந்து கொண்டு சிறப்பாக கற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்று வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வின் முன்னதாக தலைமை ஆசிரியர் தேவி லட்சுமி வரவேற்றார். ஆசிரியர் திராவிட மணி நன்றி கூறினார்.

 

Tags : Needamangalam government ,Needamangalam ,Lakshmee Vilasa Middle School ,Thiruvarur district ,Parent Teacher Association ,Treasurer ,Rajendran… ,
× RELATED உரிய ஆவணம் இல்லாத ரூ.4.92 லட்சம் பறிமுதல்