×

புதுக்கோட்டையில் குறைதீர் கூட்டம் சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகளின் 24 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை

புதுக்கோட்டை, பிப். 25: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு குறைதீர்வு நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவ ட்ட கலெக்டர் தெரிவித்ததாவது; சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களின் குறைகளை மனுக் களாக பெற்று தீர்வு காணும் வகையில், குறைதீர்வு நாள் கூட்டத்தில், ஓய்வூதியம், வீட்டுமனைப்பட்டா,

வேலைவாய்ப்பு, அரசு நல த்திட்டங்களில் முன்னுரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 24 கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமால், மாவட்ட ஆட்சியரக தலைமை உதவியாளர் சேட்டு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Tags : Pudukkottai ,Pudukkottai District Collector ,District Collector ,Aruna ,
× RELATED உரிய ஆவணம் இல்லாத ரூ.4.92 லட்சம் பறிமுதல்