- கிராமப்புற வாழ்க்கை இயக்கம்
- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்டம்,
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கம்
- மாவட்ட நடவடிக்கை மேலாண்மை
புதுக்கோட்டை, பிப். 25: புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் ஒரு மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளராக பணியாற்ற தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. புதுக்கோட்டை மாவ ட்ட அளவில் அரசு திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதற்காகவும் மற்ற அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து மாவட்ட வாழ்வாதார மற்றும் கடன் மேலாண்மை நிறுவனத்தை நிறுவுவதற்கு மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடம் வெளி ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் ஒய்வு பெற்ற வங்கி அலுவலகராக இருக்க வேண்டும்.
இப்பணியிடத்திற்கான மாத ஊதியம் ரூ.50,000 வழங்கப்படும். எனவே மேற்காணும் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள நபர்கள் 05.03.2026ம்தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்களை நேரில் சமர்ப்பிக்கவோ அல்லது பதிவு, விரைவு தபாலிலோ அனுப்ப வேண்டும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி – செயலாளர், மாவட்ட மக்கள் கற்றல் மையம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, பூமாலை வணிக வளாகம், டிஎஸ்எம்எஸ் காம்ப்ளக்ஸ், புதுக்கோட்டை 622 001. இவ்வாறு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அரு ணா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
