×

அரியலூர் மாவட்ட விவசாயிகள் விவசாய அடையாள எண் பெறுவது கட்டாயம்

அரியலூர், பிப்.25: அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் வரும் காலங்களில் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளின் சலுகைகளை பெற்றிட நில உடைமை ஆவணங்களை பதிவு செய்து விவசாய அடையாள எண் பெறுவது கட்டாயமக்கப்பட்டுள்ளது.

இதுவரை தங்களது நில உடைமை விவரங்களை வேளாண் அடுக்ககம் வலைதளத்தில் பதிவு செய்யாத விவசாயிகள் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனைத்துறை கள அலுவலர்களை தொடர்பு கொண்டு தங்களது நில உடைமை ஆவணங்களை வேளாண் அடுக்ககம் வலைதளத்தில் பதிவேற்றம் செய்து விவசாயிகளுக்கான அடையாள எண் பெற்றிட அறிவுறுத்தப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 132231 விவசாயிகளில் 89501 விவசாயிகள் இதுவரை நில உடைமை பதிவு செய்து உள்ளனர்.

மீதமுள்ள 42730 விவசாயிகள் பதிவு செய்ய வேண்டியுள்ளது. பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டம், பயிர் காப்பீடு திட்டம், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் பயன்பெற இந்த அடையாள எண் அவசியம். எனவே, அருகில் உள்ள பொது சேவை மையம் அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags : Ariyalur district ,Ariyalur ,Collector ,Rathinasamy ,
× RELATED பெண்ணிடம் செல்போன் நம்பர் கேட்டதால் தகராறு: 3 பேர் காயம்