×

வேதாரண்யம் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

வேதாரண்யம், பிப்.25: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில், கவுரவ விரிவுரையாளர்களுக்கு பல்கலைக்கழக மானிய குழு அறிவித்த ஊதியம் ரூபாய் 57 ஆயிரத்து 700 வழங்க வேண்டும்.

அனைத்து கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கும் 12 மாதங்களும் ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூபாய் 25 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும். பிஎப் வழங்க வேண்டும். பெண் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஆண், பெண் கவுரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : Vedaranyam Government College ,Vedaranyam ,Vedaranyam Government Arts and Science College ,Nagapattinam ,University Grants Commission ,
× RELATED உரிய ஆவணமின்றி ரயிலில் கொண்டு வந்த ரூ.80 லட்சம் பறிமுதல்