×

கரூர் மாவட்ட புதிய கலெக்டர் பொறுப்பேற்பு

கரூர், பிப். 25: கரூர் மாவட்டத்தின் புதிய கலெக்டராக ரவிகுமார் நேற்று மாலை பதவி ஏற்றுக் கொண்டார்.
கரூர் மாவட்ட கலெக்டராக தங்கவேல் பதவி வகித்து வந்த நிலையில், இவருக்கு பதிலாக, திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரியில் சார் ஆட்சியராக பணியாற்றி வந்த ரவிகுமார், கரூர் மாவட்ட கலெக்டராக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் கருர் கலெக்டர் அலுவலகம் வந்த அவர், கருர் மாவட்டத்தின் புதிய கலெக்டராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு அனைத்து துறை அதிகாரிகளும் சந்தித்து வாழ்த்துக்களை கூறினர்.கரூர் மாவட்ட புதிய கலெக்டராக ரவிகுமார் பதவி ஏற்றார்.

 

Tags : Karur ,district ,Ravikumar ,Karur district ,Thangavel ,Ponneri ,Tiruvallur district ,
× RELATED மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது