×

குளித்தலையில் கிராம உதவியாளர்கள் போராட்டம்

குளித்தலை, பிப். 20: கரூர் மாவட்டம் குளித்தலை வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் கோரிக்கையை வலியுறுத்தி 2 நாள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். வட்டத் தலைவர் பழனியாண்டி தலைமை வகித்தார்.

வட்ட செயலாளர் சுமதி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட இணைச்செயலாளர் அசோக்ராஜ், மாவட்ட தணிக்கையாளர் வெண்ணிலா ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்டத் தலைவர் அரசகுமார் கோரிக்கை விளக்கி விளக்க உரையாற்றினார். முடிவில் வட்ட பொருளாளர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.

 

Tags : Kulithalai ,Kulithalai Revenue Village Employees Association ,Karur ,Palaniandi ,
× RELATED கரூர் தொழிலதிபர் இந்திய நறுமணப் பொருட்கள் வாரிய உறுப்பினராக நியமனம்