×

நெரூர் செல்லும் சாலையோரம் குப்பைகள் தீயிட்டு எரிப்பதால் சுகாதார சீர்கேடு

கரூர், பிப். 19: கரூர் மாவட்டம் நெரூர் செல்லும் சாலையோரம் குப்பைகள் தீயிட்டு எரிப்பதால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. கருர் மாவட்டம் நெரூரில் புகழ் பெற்ற சதாசிவ பிரம்மேந்திரள் ஆலயமும், காசி விசுவநாதர் ஆலயமும் உள்ளது. மேலும், நெரூர் மற்றும் அதனை சுற்றிலும் உள்ள பகுதிகள் இந்த பகுதி முழுக்க முழுக்க விவசாயத்தை அடிப்படையாக கொண்ட கிராமமாக உள்ளது. இதன் காரணமாக கரூரில் இருந்து இந்த பகுதிகளுக்கு அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த பகுதிச் சாலையோரம், பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு தீயிட்டு கொளுத்தப்படுகிறது. இதனால், ஏற்படும் புகை அந்த சாலையின் வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்ப்பதோடு, விபத்துக்கும் காரணமாக உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுபோன்ற நிகழவுகள் நடைபெறாத வகையில் தேவையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

 

Tags : Nerur ,Karur ,Karur district ,Sadashiva Brahmendral temple ,Kashi Vishwanath ,
× RELATED கரூர் தொழிலதிபர் இந்திய நறுமணப் பொருட்கள் வாரிய உறுப்பினராக நியமனம்