×

துணை சபாநாயகர் சித்ரவதை புகார் ஆந்திரா மூத்த ஐபிஎஸ் அதிகாரி பீகாரில் கைது

 

குண்டூர்: கடந்த 2021ம் ஆண்டு ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியின்போது, அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஆந்திர சட்டப்பேரவை துணை சபாநாயகருமான ரகுராம கிருஷ்ண ராஜு, சிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தன்னை ரப்பர் பெல்ட்டால் தாக்கியதாகவும், மார்பின் மீது ஏறி அமர்ந்து கொடுமைப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்த புகாரின் அடிப்படையில், 2024ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் பல அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தாக்குதல் நடந்தபோது உடனிருந்ததாகக் கண்டறியப்பட்டதால் பீகாரை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சுனில் குமார் நாயக்கை ஆந்திர போலீசார் நேற்று கைது செய்தனர்.

 

Tags : Deputy Speaker ,Chitrawati ,Bihar Guntur ,YSR Congress ,Andhra ,Ragurama Krishna Raju ,AP legislature ,CID police ,
× RELATED தமிழ்நாட்டில் 30 தொகுதிகளில் இந்திய...