×

நாங்குநேரி குசவன்குளத்தில் புதிய ரேஷன்கடை

நெல்லை, பிப்.24: நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உன்னங்குளம் ஊராட்சி, குசவன்குளத்தில் பகுதி நேர நியாயவிலைக்கடை அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொருளாளரும், நாங்குநேரி எம்எல்ஏவுமான ரூபி மனோகரன் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார். அதனை தொடர்ந்து குசவன்குளத்தில் பகுதி நேர நியாயவிலைக்கடை அமைக்க அரசு ஆணை வெளியிட்டது. இதையடுத்து ரூபி மனோகரன் எம்எல்ஏ குசவன்குளம் கிராமத்திற்கு சென்று பகுதிநேர ரேஷன் கடையை திறந்து வைத்து பயனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார்.

அப்போது பொதுமக்கள் எம்எல்ஏக்கு தங்கள் நன்றியை தெரிவித்தனர். நிகழ்வில் கூட்டுறவு சார்பதிவாளர் செல்வ குமார், ராமானுஜம் கூட்டுறவு பண்டகசாலை மேலாளர் லெட்சுமணகுமார், பஞ்சாயத்து துணைத்தலைவர் அந்தோணி, கவுன்சிலர் செந்தூர்பாண்டியன், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் நாங்குநேரி வடக்கு அம்புரோஸ், பாளை. தெற்கு நளன், மூலைக்கரைப்பட்டி நகர காங்கிரஸ் தலைவர் முத்துகிருஷ்ணன், ஒபிசி மாநில பொதுச்செயலாளர் வின்சென்ட், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் போர்டு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தர், மாவட்ட இணைச்செயலாளர் ராமநாதன், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி ஊடகத்துறை ஆறுமுகராஜ், கிராம கமிட்டி தலைவர் செபஸ்தியான் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Nanguneri Kusavankulam ,Nellai ,Tamil Nadu Congress ,Nanguneri ,MLA ,Ruby Manoharan ,Assembly ,Kusavankulam, Unnankulam panchayat ,Kusavankulam… ,
× RELATED மது பாட்டில்கள் பறிமுதல்