×

விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினர் கனிமொழி எம்பியிடம் வாழ்த்து

தூத்துக்குடி, பிப். 24: தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள முரளிதரன், கனிமொழி எம்பியை சந்தித்து வாழ்த்து பெற்றார். தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினராக முன்னாள் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் நியமிக்கப்பட்டு உள்ளார். இதனைத் தொடர்ந்து அவர், கனிமொழி எம்பியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது காங்கிரஸ் நிர்வாகிகள் ரஞ்சிதம் ஜெபராஜ், குமார முருகேசன், ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Airport Advisory Committee ,Kanimozhi ,Thoothukudi ,Muralitharan ,Thoothukudi Airport Advisory Committee ,Former ,Metropolitan District Congress ,President ,Thoothukudi Airport Advisory Committee.… ,
× RELATED பெண்ணிடம் செல்போன் நம்பர் கேட்டதால் தகராறு: 3 பேர் காயம்