×

ஜனநாயகத்துக்கும் கூட்டாட்சிக்கும் பாஜக மதிப்பு தரவில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: ஜனநாயகத்துக்கும் கூட்டாட்சிக்கும் பாஜக மதிப்பு தரவில்லை. எல்லார்க்கும் எல்லாம் என்ற பரந்துபட்ட வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை:

மக்களிடையே விதைக்கப்படுகிற நல்ல கருத்துகள் தான் முன்னேற்றத்திற்கான அடிப்படையாக அமைகிறது. அவ்வாறு நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் கொள்கை முகமாக 75 ஆண்டுகளை கடந்த மாபெரும் அரசியல் இயக்கமாக மக்களின் ஆதரவுடம் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி பொறுப்பில் இருக்கிறது. பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பிறகு இந்த இயக்கத்திற்கான எதிர்கால திசைகாட்டியாக முத்தமிழறிஞர் கலைஞர் 5 பெரும் முழக்கங்களை வழங்கியுள்ளார்.

அதில் முக்கியமான ஒன்றுவன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம். திரவிட முன்னேற்ற கழகம் ஆட்சி பொறுப்பை ஏற்கும் போதேல்லாம் இதனை மனதில் வைத்து மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இங்கு ஏராளமான ஊடகவியலாளர்கள் இருகிறீர்கள். 11.19% வளர்ச்சி என்பதை தமிழ்நாடு தவிற வேறு எந்த மாநிலத்தால் சாதிக்க முடிந்துள்ளது..? அதும் எப்படி பட்ட சூழலில் இந்த சாதனை நடைபெற்றுள்ளது. ஜனநாயகத்துக்கும் கூட்டாட்சிக்கும் மதிப்பு தராத பாஜக ஆட்சி ஒன்றியத்தில் ஆள்கிறது. எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களை ஒன்றிய அரசு எந்தளவு வஞ்சகத்துடன் அணுகுகிறது என்பதெல்லம் உங்களுக்கே நன்றாக தெரியும்.

ஆளுநர் மூலமாக நிர்வாக சீர்கேடுகளை ஏற்படுத்துவதில் தொடங்கி, செயற்கையான நிதிச்சுமையை உருவாக்கி மாநிலங்களை முடக்க நினைப்பது வரை அனைத்தனையும் ஒன்றிய அரசு செய்கிறது. இது மட்டுமே அவர்களுக்கு தெரிந்த அரசியல். ஆனால் இது அனைத்தையும் அரசியல் களத்திலும், ஆட்சி அதிகாரத்திலும் எதிர்கொண்டு வளர்ச்சி அரசியல் என்றால் தமிழ்நாட்டை பாருங்கள் என்று கூறும் அளவிற்கு வளர்ச்சி அரசியலின் அடையாளமாக தமிழ்நாடு இருக்கிறது. இது ஒரு தரப்பிற்கான வளர்ச்சி மட்டுமல்ல, எல்லாருக்கும் எல்லாம் என்ற பரந்துபட்ட வளர்ச்சி. பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், திருநங்கைகள், மாற்றுதிறனாளிகள் உள்ளிட்ட எல்லோருக்கும் அதிகாரமளிக்கும் அரசியலை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.

நாங்கள் செயல்படுத்தி இருக்கூடிய திட்டங்களை வேறு எந்த மாநிலமாவது செயல்படுத்தியுள்ளதா, வளர்ச்சி சும்மா வந்துவிடுமா..? அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தியதால் தான் 11.19% வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது. தமிழ்நாட்டில் எந்த குடும்பத்தை எடுத்துகொண்டாலும் அவர்களில் ஒருவராவது நமது அரசின் திட்டத்தில் பயனடைந்திருப்பார்கள். அதனால் தான் ஆட்சிக்கு ஆதரவான மனநிலையில் மக்கள் இருப்பதாக கூறுகிறோம். தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சியும், தனித்துவமும், உண்மையான வளர்ச்சி அரசியல் என்றால் என்ன என்பதை இந்தியாவும் மற்ற மாநிலங்களுக்கு காட்டும் செயல்பாடுகளும் பாஜகவை கடுமையாக எரிச்சலடைய வைக்கிறது.

ஆனால், அவர்களது சதி அரசியல் என்ன என்பது வெளிபட்டு, அவமானப்பட்டு நிற்கிறார்கள். பாஜவின் செய்ல்பாடுகள் என்ன என்பதை திமுக மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் உணர்ந்துள்ளது. அவர்கள் மீது மக்களுக்கு நம்பகத்தன்மை கிடையாது. மற்ற மாநிலங்களில் கட்சிகளை மிரட்டி, ஆட்சிகளை பறித்து தன்னுடைய அரசை கொண்டுவர பயன்படுத்தியதை தமிழகத்திற்கும் கொண்டுவந்து கூட்டணி அமைத்துள்ளது. அவர்களது NDA கூட்டணி என்பது முழுக்க முழுக்க ஊழல்வாதிகளை மிரட்டி அமைக்கப்பட்டுள்ள கூட்டணிதான். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இருந்த முன்னால் அமைச்சர்கள் பலர் ரைடுகளுக்கு ஆளானார்கள். 10 பேர் மீது வழக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கூட்டணிக்கான அவர்களை பாதுகாத்து வருகின்றனர். முன்னால் அமைச்சர்கள் சிலர் மீது FIR பதிவு செய்தது மட்டுமல்லாமல், நீண்ட ஆண்டுகளாக நிறுத்திவைத்துள்ளனர்.

இந்த லட்ச்சனத்தில் ED, IT, CBI வைத்து எங்களையும் மிரட்டலாம் என பார்க்கிறார்கள். என்னதால் ED, IT, CBI என பாஜக தனது படைபலத்தை காட்டினாலும் அதனையும் ஒரு கை பார்க்க நாங்களும் தயாக இருக்கிறோம் என முதல்வர் கூறியுள்ளார்.

Tags : BJP ,Chief Minister ,MK Stalin ,Chennai ,Tamil Nadu ,
× RELATED அதிரடியாக உயரும் ஆபரணத் தங்கத்தின்...