×

முன்னறிவிப்பின்றி நடைமேடை மாற்றம்… 40 நிமிடங்களுக்கு ஒரு ரயில்.. : சென்னை புறநகர் ரயில் சேவையில் தொடரும் குளறுபடி!!

சென்னை : சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் புறநகர் ரயில்கள் குறைக்கப்பட்டுள்ளன. இயக்கப்படும் குறைந்த அளவிலான ரயில்களையும் முன் யோசனை இன்றி இயக்குவதால் பயணிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது. சென்னை எழும்பூர் என்ற அறிவிப்புடன் வரும் ரயில் தாம்பரத்தில் திடீரென்று நிறுத்தப்படுவதால் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர். எழும்பூர் வரை என அறிவித்த நிலையில் தாம்பரத்தில் நிறுத்திவிட்டு 3 நடைமேடை தள்ளி நிற்கும் ரயிலில் ஏற்றுகிறது நிர்வாகம். இதனால், 1வது நடைமேடையிலிருந்து 4வது நடைமேடைக்கு பெண்கள், சிறுவர்கள் இறங்கி ஓடி ரயிலை பிடிக்கும் நிலை உள்ளது. 3வது 4வது நடைமேடை வழியே முன்னறிவிப்பின்றி திடீர், திடீர் என ரயில்கள் இயக்குவதால் அவை காலியாக செல்கின்றன.

1, 2வது நடைமேடையில் காத்திருக்கும்போது 3, 4வது நடைமேடை வழியே ாயில் செல்வதால் பயணிகளுக்கு பயனில்லை. கட் சர்வீஸ் ரயில்கள் எந்த நடைமேடையில், எந்த ரயில் நிலையம் வரை இயக்கம் என்ற அறிவிப்பும் வெளியிடவில்லை. ஒரு மணி நேரத்தில் செல்லும் தொலைவை ஆங்காங்கே நிறுத்தி, 2 மணி நேர பயணமாக ரயில்வே நீட்டித்துவிட்டது. 15 நிமிடத்துக்கு ஒரு ரயில் என்பது வெற்று அறிவிப்புதான்; 40 நிமிடங்களுக்கு ரயில்களே வருவதில்லை என பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். அதிக நேர இடைவெளியில் ரயில்கள் இயக்குதால் கூட்டம் அதிகரித்து ரயில் படிக்கட்டுகளில் பயணிகள் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். ரயில்கள் குறைப்பு, 15 நிமிட இடைவெளியில் ரயில்களை இயக்காதது, முறையான அட்டவணையின்றி பயணிகள் தவிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.

Tags : Chennai Suburban ,Chennai ,Suburban ,Chennai Rampur Railway Station ,Chennai Rampur ,
× RELATED தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக இறுதி...