×

அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான ரிசார்ட்டுக்குள் நுழைய முயன்ற நபர், போலீசாரால் சுட்டுக் கொலை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான ரிசார்ட்டுக்குள் நுழைய முயன்ற நபர், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஃபுளோரிடாவில் உள்ள டிரம்ப்பின் ரிசார்ட்டுக்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. துப்பாக்கி, எரிபொருளுடன் டிரம்ப் ரிசார்ட்டுக்குள் நுழைய முயன்ற நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்குச் சொந்தமான புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லாகோ விடுதிக்குள், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 1:30 மணியளவில் அத்துமீறி நுழைய முயன்ற 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அந்த நபர் விடுதியின் வடக்கு நுழைவாயில் வழியாக ஒரு ஷாட்கன் துப்பாக்கி மற்றும் எரிபொருள் கேன் ஆகியவற்றுடன் நுழைய முற்பட்டபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ரகசிய சேவை ஏஜெண்டுகள் மற்றும் பாம் பீச் கவுண்டி ஷெரிப் அலுவலக அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தினர்.

அப்போது ஏற்பட்ட மோதலில் அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த நபர் உயிரிழந்தார். இச்சம்பவத்தின் போது அதிபர் டிரம்ப்போ அல்லது பாதுகாப்பு வளையத்தில் உள்ள பிற முக்கிய நபர்களோ அந்த விடுதியில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்தச் சம்பவம் குறித்து பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் மற்றும் ரகசிய சேவை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன், அந்த நபரின் பின்னணி மற்றும் நோக்கம் குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர்.

Tags : US President Trump ,Washington ,US ,President Trump ,Trump ,Florida ,
× RELATED “மோடியின் தந்தையே வந்தாலும்...