சென்னை: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து சவரன் ரூ.1,18,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்தச் சூழலில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வருகிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு முக்கிய காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தங்கம் விலை இந்த வாரம் தொடக்கம் முதலே அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து சவரன் ரூ.1,18,880க்கு விற்கப்படுகிறது. அதே போல், ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.180 உயர்ந்து ரூ. 14,860க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.300க்கும் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.10,000 உயர்ந்து ரூ. 3,00,000க்கு விற்பனையாகிறது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்பட்டுள்ளது.
