×

வாலாஜாபாத் பேரூராட்சியில் தெரு நாய்கள் பிடிக்கும் பணி தீவிரம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேலும் வாலாஜாபாத்தை சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் வாலாஜாபாத் நகர் பகுதியில் நாளுக்குநாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் அலுவலகங்கள், உணவகங்கள், இறைச்சி கடைகள் உள்ள பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக காணப்படுகின்றன.

ஒரு சில நேரங்களில் இந்த நாய்கள் சாலையில் நடந்து செல்வோரை பின்தொடர்ந்து துரத்தி கடிப்பது போன்ற சம்பவங்கள் குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தினகரன் நாளிதழில் செய்தி வெளியாகின. இதனையடுத்து வாலாஜாபாத் பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் 15 வார்டுகளிலும் சுற்றித் திரியும் நாய்களை பேரூராட்சி ஊழியர்கள் பிடித்து வருகின்றனர். இந்த நாய்களை பிடித்து கருத்தடை செய்து அதனை முறையாக பாதுகாத்து மீண்டும் பிடிபட்ட இடங்களில் விடப்படும் என பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் வாலாஜாபாத் பகுதியில் சுற்றித் திரியும் நாய்களின் தொல்லை வெகுவாக குறையும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Tags : Walajabad ,Valajabad ,Walajabad Nagar ,
× RELATED மோர்ஸ் கார்டன் சிறுவர் பூங்காவில் ஆபத்தான மரத்தை வெட்டி அகற்ற கோரிக்கை