ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மீன்பிடி அனுமதி சீட்டு பெற்றுகொண்டு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற பாம்பன் மீனவர்கள் 12 பேர் தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மன்னார் கடற்கடை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெறுங்கி வரக்கூடிய நிலையில், தொடர்ச்சியாக மீனவர்கள் கைது செய்யப்படுவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரம் கருதி இந்த பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காண ஒன்றிய, மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.
